சிம்பான்ஸிகளின் “பொருளை குறிபார்த்து தூக்கி எறியும்”
செயல்பாட்டில் உள்ள மொழியியல் நரம்பியல் அடிப்படைகள் என்ன ?
உயிரியல் பூங்காவில் வாழும் மனிதக் குரங்குகள் பொருள்களை ஒன்றின் மீது ஒன்று
தூக்கி எறிவதை பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல நரம்பியல் ஆய்வாளர்களும் ஆர்வத்துடன்
கவனிக்கின்றனர்.
இந்த செய்களின் மூலம் பரிணாம பாதையில் எவ்வாறு மொழி வளர்ந்துள்ளது என்று அறிய
முற்படும் வசீகரிக்கும் பயணம் இது.
சிம்பான்ஸிகள் போன்ற உயர் உயிரின தொகுதிகளை சார்ந்த
உயிரினங்கள் பொருள்களை குறி பார்த்து தூக்கி எரியும் திறனுக்கும் அவற்றிலிருந்து
மருவிய (?) மனித இனத்தின் பேச்சு திறன் வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்புகள் என்ன
? என்று இந்த கட்டுரை ஆராயும்.
நன்றாக குறி பார்த்து பொருள்களை எறியும் குரங்குகள் தங்களுடைய கருத்தை சிறப்பாக விளக்கும்
திறனை வளர்த்து தழைக்கின்றன.
பொருள்களை தூக்கி எறியும் திறனுக்கும் மூளையின் Primary Motor Cortex பகுதியின் வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு உள்ளது.
பேசும் திறன் மற்றும் பொருள்களை கையாளும் திறன்
இரண்டுமே இடது மூளையின் செயல்படும் பகுதியில் அமைந்துள்ளதை நினைவில் கொள்கையில் பல
உண்மைகள் நமக்கு புரியும்.
No comments:
Post a Comment