Pages

Total Pageviews

Thursday, 29 August 2013

மெய்நிகர் தமிழ் வளர்ச்சி நூலகம் - நூலகத்தின் அமைப்பு

நூலகத்தின் அமைப்பு 




பொதுவாக  நூலகம் என்றால் , நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், வாசகர்கள் வந்து படித்து மகிழ்வர்.

அப்படியான  வடிவில் பல்லாயிரம் நூலகங்கள்  நம்மை சுற்றி அமைந்துள்ளன , மகிழ்ச்சி. 

பொதுவாக இப்படியான நூலகங்களின் வாயிலில் ஒரு நூலகர் அமர்ந்து இருப்பார், வாசகர்களுக்கு உதவுவார். 

நாம் கேட்கும் நூல்களை அடையாளம் காட்டி , நாம் தேடும் செய்தியை பெறுவதற்கு உதவுவார் நூலகர். 

காலங்காலமாக நாம் கண்டு ,  படித்து,  மனதில் பதிந்த நூலக அமைப்பு இது. 

இதனை தாண்டி ஒரு நூலகர் பெரிதாக என்ன செய்துவிட முடியும் ? , இந்த வடிவில் மட்டுமே நூலகத்தை இயக்க முடியும் என்று உறுதியாக ஏற்பவர்கள் , ஒரு  மருத்துவ கல்லூரி ஆசிரியரால் நடத்தப்படும் இந்த மெய்நிகர் நூலகத்தின் செயல்படும் முறையை ஏற்பது  சற்று கடினமே.....

இருப்பினும் ,  காலம் செல்ல செல்ல -   நிலை மாறும் - எனக்கு என்மீது நம்பிக்கை உள்ளது, ஒரு காலம் வரும் - அன்று ஆயிரமாயிரம் மாணவர்கள், பொது மக்கள் இந்த மெய்நிகர் நூலகத்துக்கு வந்து  பயன்பெறுவர்.

மாற்றத்தை - கொண்டுவருவது  சுலபம் அல்ல. 

மாற்றம் என்று எதை நான் குறிப்பிடுகிறேன் ?

நூலகம் என்பது ஒரு புனிதமான இடம், அது வாசகர்களின் சிந்தனையை தூண்டுவதாக  அமையவேண்டும்.

மிகப்பெரிய மாற்றத்தை மனதில் ஏற்படுத்தும் சக்தி நூலகத்திற்கு உள்ளது.

நான் நூலக இயல் படிக்கவில்லை - இருப்பினும், 

ஒரு சிறப்புமிக்க நூலகமும், அதனை வழிநடத்தும் ஆழ்ந்த ஈடுபாடு உடைய நூலகரும் இணைந்தால் ஒரு சமூக எழுச்சியை உருவாக்கிட முடியும் - இது நான் ஏற்கும் சித்தாந்தம்.    

ஒரு நூலகத்தால் ஒரு இன எழுச்சியை  ஏற்படுத்த முடியுமா  ?

என்ன சார் , பெரிய பெரிய வார்த்தையை எல்லாம் சொல்கிறீர்கள் ?

இன எழுச்சி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?

ஆயிரமாயிரம் மக்கள் சிந்தனை மாற்றம் ஏற்பட்டு , உணர்வுடன் பொங்கிஎழும் நிலை அது , இன்றைய கால நிலையில் இதனை உருவாக்க எவ்வளவு பெரிய ஆள் பலம், அரசியல் பின்புலம் வேண்டும், பண பலம் வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா சார் ? 

தனி மனிதராக அதுவும் இணையத்தின் மூலம் நீங்கள் நடத்தும் மெய்நிகர் நூலகம் மூலம் இதனை செய்வதாக கூறுவது எப்படி சாத்தியமாகும் ? 

காமெடி பண்ணாதீங்க டாக்டர் ?

நான் முதன் முதலாக எனது நண்பர்  ஒருவரிடம் எனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திய பொழுது என்னை பார்த்து இந்த தீர்ப்பை அவர் கூறினார்.

எதை சமூகம் முடியாது என்று தீர்க்கமாக நம்புகிறதோ, அதனை சாத்தியமாக்க வேண்டும்.

இந்த நூலகம் ஒரு புதிய கற்பித கொள்கையை நமது சமூகத்தில் உருவாக்கும் , நிறுவும்.

வாசகர்களை ஆசிரியர்களாக உருமாற்றும் நூலகம் இது.

தமிழ் இணைய  உலகினில் கருத்து களவு என்னும் குற்றம் நிகழ்வதை முழுவதுமாக தடுக்கும் நூலகம் இது.  

எனக்கு சில நண்பர்களை , நிறைய எதிரிகளை கொண்டுவந்து சேர்க்கப்போகும் நூலகம் இது. 

தமிழ் மொழி வளர்ச்சியை , தமிழ் இன எழுச்சியை உருவாக்கப்போகும் நூலகம் இது 

ஒரு தெளிவான செயல் திட்டத்தை  மனதில் ஏற்று , இந்த மெய்நிகர் நூலகத்தை நான் வடிவமைத்துள்ளேன்.

நூலகத்தின் அமைப்பை மெல்ல மெல்ல வாசகர்களுக்கு இந்த இழையில் அறிவிப்பேன். 

Short Project Scholarship to Students

மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு :


   “அதி நவீன மருத்தவ அறிவியல் கட்டுரைகளை சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் கட்டுரையாக உருவாக்கி இலவசமாக இணையத்தில் வெளியிட்டு, மேலும் கட்டுரையில் காணப்பெறும் கருத்துக்களை எளிய தமிழில் இலவச விழியமாக உருவாக்கும் மாணவருக்கு அறிவியல் தமிழ் அறக்கட்டளை ஐந்நூறு 500 ருபாய் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் அளிக்கும்”.  

இந்த மெய்நிகர் நூலகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் தமிழை தாய்மொழியாக பெற்ற ஒரு மாணவரை தமிழ் எழுத்தாளராக, பேச்சாளராக உருமாற்றும்.

தமிழில் மாணவர்கள் உருவாக்கும் கட்டுரைகள் - தமிழ் ஆவணங்கள் என்னும் எமது தளத்தில் இலவசமாக என்றும் அமையப்பெறும். 

மாணவர்கள் உருவாக்கும் விழியங்கள், எமது அறிவியல் தமிழ் மன்றம் You Tube ஊடகத்தில் ஏற்றப்பட்டு உலகத்தமிழர்களுக்கு இலவசமாக காட்டப்படும். 




STVL 00205 - தியானம் செய்வது மூளையின் இரத்த ஓட்டத்தை எவ்வாறு பாதிக்கும்

கட்டுரை நூலகத்தில் அறிமுகமாகும் தேதி: 290813

கட்டுரையின் தலைப்பு: தியானம் செய்வது மூளையின் இரத்த ஓட்டத்தை எவ்வாறு பாதிக்கும்



கட்டுரையின் கருத்தியல்: நீண்ட காலம் தியானம் செய்பவர்களுக்கும், அவ்வாறு செய்யாதவர்களுக்கும்  இடையே மூளையின் இரத்த ஓட்டத்தில் காணப்படக்கூடிய மாறுபாடுகளை பற்றி இந்த கட்டுரை விவரிக்கும் 
கட்டுரையின் சிறப்பம்சம்: தியானம் செய்வது மூளையின் அடிப்படை அமைப்பையே மாற்றிவிடும் என்று இந்த கட்டுரை நிறுவுகிறது.   

கட்டுரை விவரிக்கும் அறிவியல் துறை: நரம்பியல்

இந்த கட்டுரை எந்த மாணவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்:
நரம்பியல் துறையில் சிறப்பு கல்வி பெற்ற உடற்கூற்றியல் அல்லது உடல் இயக்க இயல் துறையை சார்ந்த முதுகலை மாணவர்கள்


கட்டுரையை உருவாக்கிய அறிஞர் வாழும் நாடு: அமெரிக்கா

கட்டுரை அமையப்பெற்றுள்ள மொழி: ஆங்கிலம்

கட்டுரையின் அளவு: 7 பக்கங்கள்


கட்டுரையின் செய்தி ஆங்கிலத்தில் வெளியான காலம்: 2010 

Tuesday, 27 August 2013

STVL 00204 சிம்பான்ஸிகளின் “பொருளை குறிபார்த்து தூக்கி எறியும்” செயல்பாட்டில் உள்ள மொழியியல் நரம்பியல் அடிப்படைகள் என்ன ?

சிம்பான்ஸிகளின் “பொருளை குறிபார்த்து தூக்கி எறியும்” செயல்பாட்டில் உள்ள மொழியியல் நரம்பியல் அடிப்படைகள் என்ன ?



உயிரியல் பூங்காவில் வாழும் மனிதக் குரங்குகள் பொருள்களை ஒன்றின் மீது ஒன்று தூக்கி எறிவதை பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல  நரம்பியல் ஆய்வாளர்களும் ஆர்வத்துடன் கவனிக்கின்றனர்.

இந்த செய்களின் மூலம் பரிணாம பாதையில் எவ்வாறு மொழி வளர்ந்துள்ளது என்று அறிய முற்படும் வசீகரிக்கும் பயணம் இது.

சிம்பான்ஸிகள் போன்ற உயர் உயிரின தொகுதிகளை சார்ந்த உயிரினங்கள் பொருள்களை குறி பார்த்து தூக்கி எரியும் திறனுக்கும் அவற்றிலிருந்து மருவிய (?) மனித இனத்தின் பேச்சு திறன் வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்புகள் என்ன ? என்று இந்த கட்டுரை ஆராயும்.

நன்றாக குறி பார்த்து பொருள்களை எறியும்  குரங்குகள் தங்களுடைய கருத்தை சிறப்பாக விளக்கும் திறனை வளர்த்து தழைக்கின்றன.



பொருள்களை தூக்கி எறியும் திறனுக்கும் மூளையின் Primary Motor Cortex பகுதியின் வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு உள்ளது.


பேசும் திறன் மற்றும் பொருள்களை கையாளும் திறன் இரண்டுமே இடது மூளையின் செயல்படும் பகுதியில் அமைந்துள்ளதை நினைவில் கொள்கையில் பல உண்மைகள் நமக்கு புரியும்.


Thursday, 8 August 2013

STVL 00203 - மொழியின் வளர்ச்சியை உருவகப்படுத்தி மொழியின் தோற்றம் பற்றி அறிய முடியுமா ?

மனித இனம் பரிணமித்த பொழுது மொழி மருவியது

இவ்வாறு மருவ என்ன காரணம் ?



மரபணுவின் தாக்கத்தினால் மொழி உருவானதா அல்லது வேறேதும் தனியான சக்தி இதில் தனது பங்கை அளித்துள்ளதா ?

தத்துவ ஞானிகள் மட்டுமே கருத்து கூறிய இந்த கேள்வியிர்கான விடையை அறிவியல் அறிஞர்கள் இன்று எதிர்கொள்கின்றனர்

மொழியின் வளர்ச்சியை உருவகப்படுத்தி   மொழியின் தோற்றம் பற்றி அறியும் முயற்சி இது

எவ்வகை மாணவர்களுக்கு இந்த கட்டுரை மிகுந்த பயனளிக்கும் : மொழியியல் ஆய்வு மாணவர்கள் 

கட்டுரை உருவாக்கப்பட்ட காலம் : 2002 

ஆசிரியர் குழு வசிக்கும் நாடு : அமெரிக்கா 

கட்டுரையில் உள்ள மொத்த பக்கங்களின் எண்ணிக்கை : 61 


STVL 00202 -முதியவர்களுக்கு வீட்டிலேயே இதயவியல் மருத்துவம் தருவது எப்படி ?

முதியவர்களுக்கு வீட்டிலேயே இதயவியல் மருத்துவம் தருவது எப்படி ? 

மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் துன்புறும் வயது முதிர்ந்த இதய நோயாளிகள் எவ்வாறு வீட்டில் இருந்தபடியே வைத்தியம் பெறுவது என்று இந்த கட்டுரை விளக்கும் 





எவ்வளவுதான் நாம் நமது கலாச்சாரம் என்று மார் தட்டி பேசினாலும் ,  கவனிக்க ஆள் இல்லாமல் ஆயிரக்கணக்கான பெரியவர்கள் அனாதைகளாக நமது சமூகத்தில் வாழத்தான் செய்கின்றனர் 


இது எதார்த்தம் 


இது உண்மை 


இதை மருத்துவ  ரீதியில் எதிர்கொள்வது எவ்வாறு என்று இந்த கட்டுரை விவரிக்கும் 



கட்டுரை உருவாக்கப்பட்ட காலம் : 2012

ஆசிரியர் குழு வசிக்கும் நாடு : டென்மார்க் 

கட்டுரையில் உள்ள மொத்த பக்கங்களின் எண்ணிக்கை : 10


துவக்கம்

தனி மரம் தோப்பாகுமா ?
ஆகும்
அது தன்னை ஒரு ஆலமரமாக மருவிக்கொள்ளும் பொழுது......

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இன்று முதல் இயங்கத்துவங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படியொரு நூலகத்தை துவங்கவேண்டும் என்று ஜூன் 15 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் உயர்மட்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த இருபது ஆண்டுகளில் (2033) உலகின் மிகப்பெரிய தமிழ் இணைய நூலகமாக   இது உருவாக்கப்படும்.

இந்த இணைய நூலகத்தில் குறிப்பிடப்படும் அறிவியல் கட்டுரைகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அவை ஆங்கிலத்தில் அமையப்பெற்றுள்ளன. பல்வேறு நாட்டு அறிஞர்களின் அறிவியல் கருவூலம் அது.

இலவசமாக கட்டுரைகளை பெற விழையும் மாணவர்கள் நேரிடையாக என்னை தொடர்புகொள்ள வேண்டும்.

இதுவரை 148 மாணவர்கள் எங்களுடைய நூலகத்தை பயன்படுத்தி அறிவியல் கட்டுரைகளை  பல்வேறு தேசிய ,சர்வதேச மாநாடுகளில் வாசித்து சான்றிதழ்களை பெற்று சிறப்புற்று உள்ளார்கள்.

இந்த கட்டுரைகளை யாருமே என்றுமே பொருளீட்ட பயன்படுத்தக்கூடாது என்ற காரணத்தால், இக்கட்டுரைகளில் உள்ள கருத்துக்களை சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மட்டுமே வெளியிடவேண்டும் என்னும் காரணத்தால், தவறான கைகளில் அவை என்றுமே சிக்காமல் இருக்கவே  இத்தகைய அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை வேறொரு தளத்தில் இயங்கிய இந்த நூலகம் புதிய தோற்றத்துடன் தனியான விலாசத்துடன் இனி இயங்கும்.

மாணவர்கள் நேரிடையாக எங்களை தொடர்புகொண்டு பயன்பெற அறிவுறுத்தப்படுகின்றனர். scientifictamilvirtuallibrary@gmail.com


புரிதலுக்கு நன்றி

டாக்டர்.மு.செம்மல் 
MBBS.,DLO.,B.Sc.,M.Sc.,M.Phil.,M.D.,Ph.D

நிர்வாக இயக்குனர்
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை


938 10 45 3 44